மாணவிகள்-பொலிஸ் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மாணவிகள் மற்றும் காவல்துறை இணைந்து போக்குவரத்து விதி மீறல்கள் தவிர்க்க விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி காமராஜர் சதுக்கம், ராம்சந்து உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக காந்தி மைதானத்தில் உள்ள புயல் நிவாரண கூடத்தில் முடிவடைந்தது.

அங்கு காவல் துறை ஆய்வாளர் பாலசுந்தரம் மாணவிகளுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை பற்றி விளக்கி பேசியது மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து அனஞ்சன்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *