விவசாயி வீட்டில் நுழைந்த சிறுத்தை


நீலகிரியில் உள்ள பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் வசித்து வரும் விவசாயி ராயன்.

இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று திரும்பி வரும் போது, வீட்டின் உள்ளிருந்து உறுமல் சத்தம் கேட்டு அச்சத்தில் மீண்டும் கதவை மூடி வனதுறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து வனதுறையினர் வந்து 3 வயதான அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தனர். வீட்டின் பின்புறம் இருந்த ஓட்டை வழியே உள்ளே நுழைந்து இருப்பதாக வனதுறையினர் தெரிவித்தனர்.

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து அனஞ்சன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *