பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயரை வைத்த தம்பதியினர்


விமானி அபிநந்தன் விடுதலையான வெள்ளிக்கிழமை அன்று பிறந்த ஆண் குழந்தைக்கு அபிநந்தனின் பெயரை வைத்து ராஜஸ்தான் தம்பதியினர் மகிழ்ந்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருக்கும்போது அவர் பேசிய வீடியோ வெளியானது. அதில் அவர் துணிச்சலுடனும், தைரியத்துடனும் அவர் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளானது.

இந்திய மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகவே பார்க்கப்பட்டார் அபிநந்தன். இந்நிலையில், ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள கிஷான்கர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தாத்தா ஜனேஷ் பூட்டானி, “அபிநந்தன் விடுதலையான அன்று மாலை என்னுடைய மருமகள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு விமானி அபிநந்தனைக் கவுரவப்படுத்தும் விதமாக அவரின் பெயரை வைத்துள்ளோம்.

அபிநந்தனை எண்ணிப் பெருமை கொள்கிறோம். அபிநந்தனை விடுதலை செய்வது தொடர்பான பணிகள் நடந்துகொண்டிருந்தபோது வீட்டில் அனைவரும் செய்தி சேனல்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது என் மருமகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது என்றார்.

தாய் சப்னா தேவி பேசும்போது, “அபிநந்தன் என்று என்னுடைய மகனை அழைக்கும்போதெல்லாம், விமானி அபிநந்தனின் வீரச் செயல்களைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருப்போம். என் மகன் வளர்ந்து பெரியவனாகும்போது, அவரைப் போன்ற துணிச்சல் மிக்க வீரனாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் என்கிறார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *