நாவற்குழி அருங்காட்சியகம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு தமிழ் முன்வைப்பா? நிலாந்தன்


நாவற்குழி அருங்காட்சியகம்க்கான பட முடிவுகள்"
கடந்த ஆண்டு யாழ் டான் தொலைக்காட்சி அந்த ஆண்டுக்கான டான் விருதை ஆறு திருமுருகனுக்குவழங்கிய போது அந்த விருது வழங்கும் வைபவத்தில் எனக்கருகில் இருந்த ஒரு மூத்த சிவில் அதிகாரி பின்வருமாறு சொன்னார்

இந்த விருது ஆறு திருமுருகனுக்கு வழங்கப்படுகிறது அவரை ஒரு சமயச் சொற்பொழிவாளர் சொற்பொழிவாளராக தான் தமிழ்ச் சமூகம் அதிகம் அறிந்து வைத்திருக்கிறது.ஆனால் அதற்கும் அப்பால் அவர் முதியோர் பராமரிப்பு அனாதை சிறார்கள் பராமரிப்பு போன்ற துறைகளில் தமிழில் முன் உதாரணம் மிக்க பல செயல்களைச் செய்திருக்கிறார்

இவற்றுக்கும் அப்பால் அவர் ஒரு காரியத்தையும் செய்திருக்கிறார் அது என்னவென்றால் நாவற்குழியில் அவர் கட்டியிருக்கும் திருவாசக அரண்மனை தான் அது.

அந்த அரண்மனையை வெறுமனே ஒரு மதம் சார் மண்டபமாக நாங்கள் பார்க்க தேவையில்லை அதற்கும் அப்பால் அதற்கு ஓர் ஆழமான அரசியல் பரிமாணம் இருக்கிறது நாவற்குழியில் அரசாங்கம் ஒரு விகாரையை கட்டி எழுப்பி வருகிறது  அந்த இடத்தில் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அடாத்தாக குடியமர்த்தப்பட்ட சிங்கள குடியிருப்புக்கான வழிபாட்டு இடமாகத்தான் அந்த விகாரை கட்டப்பட்டு வருகிறது. இப்படி பார்த்தாள் அந்த விகாரை  ஆனது ஒரு மரபுரிமை யுத்தத்தின் வெளிப்பாடு யுத்தத்தை அரசாங்கம் வேறு வழிகளில் தொடர்கிறது என்பதற்கு அதுவும் ஓர் உதாரணம் அப்படிப்பட்ட முக்கியத்துவம் மிக்க இடத்தில் அந்த விகாரையில் இருந்து சில நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் இந்த திருவாசக அரண்மனை அமைந்திருக்கிறது அந்த விகாரைக்கு சிங்கள யாத்ரீகர்கள் வருவதைப் போலவே சிங்கள உல்லாசப் பயணிகள் வருவதைப் போலவே இந்த திருவாசக அரண்மனைக்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் வந்து போகிறார்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வருபவர்களும் திருவாசக அரண்மனைக்கு வந்து போகிறார்கள் இப்படி பார்த்தால் தமிழ் தரப்பில் சிங்கள-பௌத்த மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு தற்காப்பு கவசமாக இந்த திருவாசக அரண்மனை எடுத்துக்கொள்ளலாமா ?என்று அவர் என்னிடம் கேட்டார்

அவர் அப்படிக் கேட்டது சரிதான் என்பதனை திருவாசக அரண்மனை திறக்கப்பட்ட முதலாவது ஆண்டு விழாவை கொண்டாடிய போது நிரூபிக்கப்பட்டது திருவாசக அரண்மனை அதன் முதலாவது ஆண்டு விழாவை கொண்டாடிய அதே நாளில் பௌத்த விகாரையில் விசேஷ பிரித் ஒதும் வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது ஒரே நாளில் சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள இவ்விரண்டு இடங்களிலும் ஒலிபெருக்கிகள் ஒரேநேரத்தில் ஒலித்தன அது அங்கு ஒரு மோதல் இருப்பதைக் காட்டியது திருவாசக அரண்மனை க்கு மதம் கடந்து ஓர் அரசியல் பரிமாணம் இருப்பதனை அது காட்டியது

கடந்த கிழமை திருவாசக அரண்மனைக்கு எதிர்த்திசையில் ஆறு திருமுருகன் யாழ்ப்பான அருங்காட்சியகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்

அந்த அருங்காட்சியகம் தொடர்பாக எனக்கு சில கேள்விகள் உண்டு எனினும் அக்கேள்விகளுக்கும் அப்பால் நான் முன்பு சொன்ன அந்த மூத்த சிவில் அதிகாரி கூறியது போல அங்கே ஒரு மரபுரிமை தற்காப்பு யுத்தமும் இருக்கிறது.

முதலில் அந்த அருங்காட்சியகம் தொடர்பான எனது கேள்விகளை பார்க்கலாம்

முதலாவது கேள்வி அந்த அருங்காட்சியகம் ஆனது ஓர் அரச தரப்பின் அருங்காட்சியகம் ஓர் அரசு தரப்பு அருங்காட்சியகங்க ளை உருவாக்கும் பொழுது அங்கே அரச வளம் முழுவதும் கொட்டி அது அந்த நாட்டின் மரபுரிமை சின்னங்களை பேணிப் பாதுகாக்கும் ஒரு த லமாக கட்டியெழுப்பப்படும்

ஆனால் அரசு இல்லாத தரப்பு அப்படிப்பட்ட ஓர் இடத்தை கட்டும் பொழுது அதற்கென்று வரையறைகள் உண்டு இதுதொடர்பான உலகளாவிய அனுபவங்களை உள்வாங்கி மேற்படி அருங்காட்சியகம் திட்டமிடப்பட்ட வடிவமைக்கப்பட்ட தா?

இரண்டாவது கேள்வி ஒரு அருங்காட்சியகத்தை  கட்டியெழுப்பும் பொழுது அங்கே   மரபை பேணுவது என்பதற்கும் அப்பால் அதை எப்படிப் பேண போகிறோம் என்பது தொடர்பில் உலகளாவிய அனுபவங்கள் கிரகித்துக் கொள்ளப்பட்டன வா? அதாவது ஒரு சமூகத்தின் மரபுரிமைச் சொத்துக்களை பேணுவது என்பது நவீன மானதாக அமைய வேண்டும் அவ்வாறு மரபுரிமை சின்னங் களை பேணும் ஒரு அருங்காட்சியகம் நவீனமாக வடிவமைக்கப்பட வேண்டும் மேற்படி அருங்காட்சியகம் அவ்வாறு நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிற தா? இது இரண்டாவது கேள்வி

ஒரு சமூகத்தின் மரபுரிமை என்று வரும்பொழுது தனிய ஒரு மதத்தின் மரபுரிமை சொத்துக்கள் மட்டும் பாதுகாக்கப் படக்கூடாது மாறாக அந்த சமூகத்தின் பல்சமய சூழல் அதாவது அந்த மக்கள் கூட்டத்தின் பல்வகைமை அங்கே பேணப்பட வேண்டும் தமிழ் சமூகத்தில் காணப்பட்ட எல்லா மதக் கூறுகளையும் எல்லா சமூக கூறுகளையும் நல்லதையும் கெட்டதையும் காய்தல் உவத்தல் இன்றி அதற்குரிய பல்வகைமையோடு அங்கே பேண வேண்டும்

ஏனெனில் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதத்தின்  மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிரான தமிழ்த்தேசியத்தின் மரபுரிமை தற்காப்பு எனப்படுவது ஒரு மதத்தை உயர்த்தும் ஒரு மரபுரிமை பேணு கையாக அமைய முடியாது அந்த அருங்காட்சியகம் ஆனது தமிழ்த்தேசியத்தின் பல்வகைமையை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் இன்னும் ஆழமாக சொன்னால் தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக இதயத்தின் செழிப்பை அது வெளி க் காட்டவேண்டும் இந்த விடயம் மேற்படி அருங்காட்சியகத்தை கட்டியெழுப்பும் பொழுது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தா?

மேற்படி கேள்விகளுக்கு விடை காணும் போது இனி வரும் காலங்களில் கட்டுப்படக்கூடிய அருங்காட்சியகங்கள் அவற்றுக்கான முழுமையோடு உருவாக்கப்படும்

சிவபூமி  அறக்கட்டளை உருவாக்கியிருக்கும் மேற்படி அறக்கட்டளையானது பெருமளவுக்கு ஆறு திருமுருகன் என்ற ஒரு தனி மனிதனின் உழைப்பு தான் இதில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதாக அவர் கூறுகிறார்

குறிப்பாக ஓவியங்களை வரையும் பொழுது யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறையின் ஆலோசனைகள் பெறப்பட்டு இருப்பதோடு அந்த ஓவியங்களை  படைத்ததும் மேற்கூறிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் மாணவர்களுமே என்று அறிய முடிகிறது எனவே இது விடயத்தில் மேற்படி அருங்காட்சியகம் ஒரு துறை துறைசார் நிபுணத்துவம் பெற்று இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்

இதைப்போலவே சிற்பங்களை வடிவமைக்கும் போதும் அதற்குரிய துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதா?

ஒரு சமூகத்தின் மரபுரிமைச் சொத்துக்களை பேணுவது என்பது ஒரே நேரத்தில் ஒரு பண்பாட்டுச் செயற்பாடும் அரசியல் செயற்பாடும் ஆகும் குறிப்பாக இன்னொரு பெரிய சமூகத்தின் மரபுரிமை ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் ஒரு சிறிய சமூகத்தைப் பொருத்தவரை அதுவும் அரசற்ற தரப்பாக உள்ளஒரு சமூகத்தைப் பொருத்தவரை மரபுரிமை பேனுகை எனப்படுவது அதற்கான வரலாற்று விழி ப்போடும் பண்பாட்டு விழிப்போடும் அழகியல் விழிப்போடும் அரசியல் விழி போடும் மிக நவீனமான தாகவும் திட்டமிடப்பட வேண்டும் அதாவது அது பல துறைசார் நிபுணர்களின் கூட்டு நடவடிக்கையாக அமைய வேண்டும் அந்தந்த துறைக்கு உரிய நிபுணர்களின் துறைசார் நிபுணத்துவம் பெறப்பட்ட பெறப்பட்டு ஒரு கூட்டு உழைப்பாக அது உருவாக்கப்படவேண்டும்.

சில மாதங்களுக்கு முன் தொடங்கிய சுவர் ஓவிய அ லையை போல அது துறைசார் நிபுணத்துவ த் தை புறந்தள்ளி விட்டு முழுக்க முழுக்க ஜனரஞ்சக தளத்தில் முன்னெடுக்கப்படும் ஜனரஞ்சக நடவடிக்கையாக மட்டும் குறுக்க படக்கூடாது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆகிய ஆறு திருமுருகனின் தனிநபர் உழைப்பை இக்கட்டுரை போற்றுகிறது

அதேசமயம் நாவற்குழியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மரபுரிமை மோதலை அரசற்ற தரப்பு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் ? தனிய ஒரு ஆறு திருமுருகனின் தலையில் மட்டும் சுமத்திவிட்டு சமூகத்தின் ஏனைய பொறுப்புமிக்க புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் அவர் திறந்து வைக்கும் அருங்காட்சியகத்தில் விருந்தினர்களாக கலந்து கொண்டு விட்டு அதைப் பாராட்டினால் மட்டும் போ துமா?

அதற்கும் அப்பால் இதுபோன்ற மரபுரிமை மோதல்கள் நடக்கும் எல்லா இடங்களிலும் தமிழ்மக்களின் மரபுரிமை சொத்துக்களை பாதுகாப்பதற்கான தற்காப்பு யுத்தத்தை தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக செழிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் உலகின் ஏனைய அரச சற்ற தரப்புகளின் அனுபவங்களையும் உள்வாங்கிய ஒரு நவீன செயற்பாடாக மு ன்னெடுக்க வேண்டும்

ராஜபக்சக்க லின் இரண்டாவது ஆட்சியானது யுத்தத்தை மேலும் புதிய வழிகளில் தொடரக் கூடும் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு வந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமானது ஆயிரம் பௌத்த விகாரைகளை கட்டித் தருவேன் என்று சிங்கள மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது

ராஜபக்ஸவுக்கு எதிராக தேர்தலில் நின்ற சஜித் பிரேமதாச வே அவருடைய அமைச்சின் நிதியில் நாவற்குழி விகாரையை கட்டினார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது எனவே சிங்கள பௌத்த மரபுரிமை ஆக்கிரமிப்பை பொருத்தவரை ராஜபக்சக்களும் நல்லாட்சி காரர்களும் ஒன்றுதான்

அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை களமும் ஏறக்குறைய சற்று முன்பின்னாக தான் வரப்போகின்றன ஜெனிவா கூட்டத்தொடரில் மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு மோதலை முன்னெடுப்பதன் மூலம் உள்நாட்டில் இனரீதியாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு ராஜபக்சக்கள் முயற்சிக்கக் கூடும் எனவே மரபுரிமை ஆக்கிரமிப்பு எனப்படுவது இனிவரும் காலங்களில் மேலும் விஸ்தரிக்கப்பட்ட வடிவங்களில் முன்னரை விட தீவிரமான விதங்களில் முன்னெடுக்கப்பட கூடிய வாய்ப்புகளே அதிகம் தெரிகின்றன

அப்படிப்பட்ட ஓர்அரசியல் சூழலில் நாவற்குழியில் திறக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்துக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு ஓர் அரசியல் முக்கியத்துவம் உண்டு ஒரு பண்பாட்டு முக்கியத்துவம் உண்டு

அரசு இல்லாத தரப்பாகிய தமிழ்த் தரப்பு தனது மரபுரிமை சொத்துக்களையும் செழிப்பையும் தமிழ்தேசிய நோக்கு நிலையிலிருந்து எப்படிப் பேணுவது என்பதனை துறைசார் நிபுணத்துவ த் தோடும் அழகி யல் உணர்வோடும் நவீனமான தாகவும் திட்டமிட வேண்டும்.

நிலாந்தன், கட்டுரையாளர் ஓர் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *