மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா.


தமிழ்த் திரைப்பட வரலாற்றில் காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான தேனினும் இனிய பாடல்களை வழங்கி மெல்லிசை மன்னராக நமது இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாய் வீற்றிருக்கும் இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் ஜூலை 7ஆம் தேதி ஞாயிறன்று மாலை 4.15 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்” என்ற தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

முழுவதும் எம்.எஸ்.வி. அவர்களின் இசையமைப்பில் உருவான அதியற்புதமான பாடல்களை, எமது “லஷ்மன் ஸ்ருதி” இசைக் குழுவின் சார்பாக வழங்க உள்ளனர் .

 

1952 ஆம் ஆண்டு துவங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய மெல்லிசை மன்னரின் பாடல்களை கேட்க வரும் ரசிகர்களை, மூன்று மணி நேர இசைநிகழ்ச்சியில் திருப்திபடுத்த இயலாது என்பதால், நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தினை கூடுதலாக்கி மாலை 4.15 மணி முதல் இரவு 10.15 மணி வரை வித்தியாசமான முறையில் ஆறு மணி நேர இசைநிகழ்ச்சியாக நடத்த உள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *