வடமாகாண சபை தேர்தல் நாளை : தமிழ் தேசியத்திற்கான குரலுடன் கூட்டமைப்பு வெற்றிபெறுமா?


தாயக அரசியலில் சூடு பிடித்துள்ள வடமாகாண சபைத் தேர்தல் நாளை நடைபெற இருக்கின்றது. இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அதிக கவனத்தைப் பெற்ற இந்த தேர்தலில் யார் வெற்றிபெற உள்ளார்கள் என்பதிலும் பார்க்க கூட்டமைப்பு 2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறுமா என அறிவதிலே உலகின் பல நாடுகளில் அதிக கவனம் உள்ளது.

தேர்தல் பிரச்சார காலங்களில் கணிசமான அளவு தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தி அவர்களின் வீட்டின் மீது நடாத்திய தாக்குதல்களால் தமிழர்கள் சினம் கொண்டுள்ளார்கள். அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நாளை வாக்களிப்பு நடைபெற உள்ளது.

தேர்தல் பிரதேசங்களில் ஊடகங்களுக்கான அனுமதி சுதந்திரமாக இல்லாத போதும் பல செய்தி இணையத்தளங்கள் தேர்தல் மீதான கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ள போதிலும் பெரும்பாலான தளங்களில் வாசகர்கள் கூட்டமைப்புக்கான வெற்றியை எதிர்வு கூறியுள்ளனர். ஆயினும் நேர்மையாகவும் நீதியாகவும் தேர்தல் நடைபெறுமா என்பதே தொடர்ந்து வரும் கேள்வி. பொறுத்திருந்து பார்ப்போம்.

புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கப் போகின்றது. தமது உறவுகளுக்கு தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க தூண்டுவார்களா?

TNA052013Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *