உங்களுக்கு எப்போதும் எண்ணெய் வழியும் முகமா?


முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசையைப் போக்கும் ஒருசில எளிமையான நேச்சுரல் ஸ்கரப்களைப் பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முக்கியமாக இந்த ஸ்கரப்களில் நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சை சாறு, முட்டை, தக்காளி போன்ற சரும அழகை மேம்படுத்தி, ஆரோக்கியமாக்கும் பொருட்கள் இருந்தால், இன்னும் நல்லது. சரி, இப்போது சருமத்தில் வழியும் அதிகளவு எண்ணெய் பசையைப் போக்கும் ஸ்கரப்களை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

நாட்டுச் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு

தேவையான பொருட்கள்: நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை:

(+) ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
(+) பின் அந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
(+) பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

நன்மைகள்: இந்த ஸ்கரப் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்திக் காட்டும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *