123 வயதில் அபுதாபிக்கு சென்ற நபர்… விமான நிலைய அதிகாரிகள்…


123 வயதுள்ளவர் விமானம் மூலம் அபுதாபி விமான நிலையத்துக்கு வந்ததை கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சுவாமி சிவனந்தா என்பவர் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி 1896ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்துள்ளார். இவர் கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்ல துபாயில் இருந்து மற்றொரு விமானம் பிடிக்க இறங்கியுள்ளார். அப்போது அங்கு அவரது பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் பாஸ்போர்ட்டில் உள்ள பிறந்த தேதியின் படி, அவரது வயது 123 என்பதே. ஆனாலும் அவர் ஆரோக்கியமாக எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் விமானத்தில் பயணித்து சாதாரணமாக உள்ளார் என்பது தான்.

சுவாமி சிவானந்தாவின் பெற்றோரை தனது 6 வயதிலேயே இழந்து விட்டாராம். அதன்பிறகு அவரது உறவினர்களால் ஒரு ஆன்மீக குருவுக்கு வழங்கப்பட்டாராம். அதனை தொடர்ந்து அவர் வாரணாசியில் குடியேறுவதற்கு முன்பு இந்தியாவை சுற்றுப் பயணம் செய்தாராம்.

அவர் உண்மையில் 123 வயதுடையவரா என்று சொல்வது கடினம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவரது வயது குறித்த ஒரே பதிவு கோவில் பதிவேட்டில் மட்டுமே இருந்து வருகிறது. இந்த பதிவேட்டில் இவருக்கு தேதி உண்மையாகும் பட்சத்தில் உயிர் வாழும் மிக வயதானவர் என்ற பெருமையை சுவாமி சிவனந்தா பெறுவார். இதற்கான கின்னஸ் உலக சாதனைக்கு இவர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரையில் பிரான்ஸை சேர்ந்த ஜெனி லுயிஸ் என்பவர் தான் 122 வயது மற்றும் 116 வயதை எட்டிய ஜப்பானை சேர்ந்த கேன் தனகா என்பவர் தான் கின்னஸ் புத்தகத்தில் மிக வயதான நபர் என்று உள்ளது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *