ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த ஒலிவர் டேவிஸ்


அவுஸ்திரேலியாவின் இளம் வீரரான ஒலிவர் டேவிஸ் அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில், ஒரு ஓவரில் 6 சிக்சர்களை விளாசியுள்ளார்.

போட்டியில் அவர் 115 பந்துகளில் 207 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 19 வயத்துக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் வீரரொருவர் இரட்டைச் சதம் அடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

போட்டியில் 40 ஆவது ஓவரில் 6 பந்துகளையும் ஒலிவர் டேவிஸ் சிக்சர்களாக மாற்றினார். அவர் 100 ஓட்டங்களை கடந்ததன் பின்னர் அடுத்த சதத்தை 39 பந்துகளில் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் ஒலிவர் டேவிஸ், நியூசவூத் வேல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *