களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓவியா, எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என்று கூறியிருக்கிறார்.
களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2விலும் நாயகியாக நடித்துள்ளார்.
ஓவியாவிடம் அவரது திருமணம் பற்றியும் அரசியலுக்கு வருவீர்களா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஓவியா அளித்த பதிலில் கூறியதாவது:-
நான் திருமணமே செய்துகொள்ளப்போவது இல்லை. எனக்கு ஆண் துணை தேவையே இல்லை. தனியாக இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே திருமணம் வேண்டாம்.
எதிர்காலத்தில் என் மனது மாறினால் பார்ப்போம். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை.
சினிமாவில் நடிக்க வேண்டும். நான் நடிக்கும் படங்கள் லாபம் பார்க்கவேண்டும். அது போதும்’. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி-sikaram