காதலர் தினம்


விழியில்தானே விழுந்தேன் – தினம்

உயிரைத்தேடி அலைந்தேன்

தோளில் சாய்ந்துகொண்டாய் – நான்

மூச்சை நிறுத்திக்கொண்டேன்.3 thoughts on “காதலர் தினம்

 1. நெஞ்சில் சரிந்து கொண்டாய் – உனை
  மடியில் சாய்த்துக் கொண்டேன்
  கண்ணால் கதை சொன்னாய் – நான்
  காதலில் கிறங்கி போனேன்

  உயிராய் உருகி நின்றாய் – உனை
  மனசால் விரும்பி அழைத்தேன்
  தென்றலாய் அருகில் வந்தாய் – நான்
  உனக்குள் நுழைந்து கொண்டேன்

  மலராய் வாசம் வீசினாய் – உனை
  பூவாய் ஏந்திக் கொண்டேன்
  இதழால் வருடிக் கொடுத்தாய் – நான்
  உன்னில் தொலைந்தே போனேன்

 2. சொல்ல வந்ததென்ன – என்
  தோளில் சாய்ந்ததென்ன
  சொல்லொன்று சொல்லி விடு – என்றும்
  சொர்க்கமடி அது எனக்கு.

  செல்வி

 3. காதலினால் உன் உருவம் என் மனதில்,
  காவியமாய் கதைகள் பல சொல்லுதே.
  உரிமையுடன் தோள் சாய உள்ளமதில்,
  உவகையது பொங்கி வருகுதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *