முக்கோண போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி!


சிம்பாப்வேயில் இடம்பெற்று வரும் முக்கோண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சொலமன் மையர் 94 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலளித்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்ததுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *