வீட்டில் ஒற்றை குழந்தை உள்ளதா | பெற்றோர்கள் கவனத்திற்கு!


ஒற்றைக் குழந்தை தான் உடன் பிறந்த குழந்தை இல்லை என்றால் அக்குழந்தைக்கு நிறைய விஷயங்களை பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும்.

குழந்தைகள் எல்லாரும் மற்ற குழந்தைகளுடன் முன் போல் சகஜமாக விளையாடுவதில்லை. வீட்டின் உள்ளே அதிலும் மொபைல் கொடுத்துவிட்டால் போதும் அதை தவிற அதர்க்கு என்ன வேண்டும் இந்த உலகத்தையே மறந்துவிடும்.

உடன் பிறந்த அண்ணண், அக்கா, தங்கை, தம்பி யாராவது இருந்தால் பரவாயில்லை. ஒற்றை குழந்தை தான் என்றால் கவனம் அதிகம் இருக்க வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரி இருந்தால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை சிறு வயதிலே வந்துவிடும். சகிப்புத்தன்மை உருவாகும், குழந்தைகான பாசம் சரி பாதியாக கிடைக்கும்.

ஒற்றை குழந்தை தான் என்பதால் கேட்பதெல்லாம் வாங்கி கொடுத்துவிடுவது பெரும் தவறு. இல்லை என்ற பழக்கத்தை குழந்தைகள் மனதில் திணிக்க வேண்டும்.

வெளியில் மற்ற குழந்தைகளுடன் பழக விடவும். வைத்திருக்கும் பொருட்களை அதாவது விளையாட்டு பொருட்களை பிற குழந்தையுடன் பகிர்ந்து கொண்டு விளையாட கற்றுக் கொடுங்கள். பொறுமை, பாசம், அன்பு, பழகும் விதம் அனைத்தையும் பெற்றோர்களிடம் இருந்து தான் குழந்தை கற்றுக் கொள்ளும்.

வீட்டில் வேலைப்பார்ப்பவர்கள் இருந்தால் அவர்களுடன் சகஜமாக பழக விடவும். தெரியாத நபரோடு எப்படி பழகுவது என்று அவர்கள் மூலம் கற்றுகொள்ள அதிகம் வாய்ப்புள்ளது.

அடுத்தவர்களை மதிக்க வேண்டும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், கஷ்டம் என்பது வாழ்க்கையில் உள்ளது என்று எப்பொழுதும் அவர்களுக்கு நினைவூற்ற வேண்டும்.

என்றைக்குமே ஒற்றை குழந்தையை தனியாக விடுவது நல்லதல்ல. பிற குழந்தைகளுடன் அல்லது பெற்றோர்கள் யாராவது உடன் இருந்தால் குழந்தை தனிமையில் இருப்பது போல் உணராது.

 

நன்றி : tamil.eenaduindia.com

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *