இலங்கை பாராளுமன்றம் இன்று கூடுகின்றது


பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய தினமும் பொதுமக்கள் கெலரி மற்றும் விசேட அதிதிகளுக்கான கெலரி ஆகியன மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை கூடவுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில், இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத பாராளுமன்ற அமர்வு, அத்துடன் நாம் ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியின் சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கேற்கவுள்ளதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பாராளுமன்ற அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், பாராளுமன்ற நிர்வாகத்தினர் உள்ளிட்ட 20 பேரின் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் பொலிஸ் அதிகாரிகள் சிலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ், அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *