பேய் மாமாவாக வடிவேலு


சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாக்க இருக்கும் புதிய படத்திற்கு “பேய் மாமா” என தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சில காலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு முழுநீள காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கம் இந்த படத்திற்கு பேய் மாமா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலோடு வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று பின்னர் செய்தி வெளியானது.

விரைவில் சக்தி சிதம்பரம் – வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 12 =