28 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்! (படங்கள் இணைப்பு)


28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 683 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர்மல்க பார்வையிட்டனர்.

28 வருடங்களுக்கு முன் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பினால் வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதியாக மாறியது. பின்னர் இந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம வடக்கு மக்கள் இடம்பெர்ந்து 40ற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 683 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பல வருடங்களின் பின் காடுகளாக மாறி கிடக்கும் தங்கள் சொந்த நிலத்தை வலிகாமம் வடக்கு மக்கள் ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + four =