படைபலத்துடன் வெளியாகிய பேட்ட ட்ரைலர்!


ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இவருடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளன.

 அடுத்தபடியாக, பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும் என பேட்ட இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார்.

ரஜினி ஸ்டைலாக, இளமையாக, குறும்புத்தனமாக, ஆக்ரோஷமாக, அடிதடி என எல்லாம் கலந்து பேட்டையில் இருக்கிறார்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *