பிரபாகரனை முன்வைத்தே எங்களது பரப்புரை இருக்கும்: சீமான் உறுதி


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை முன்வைத்தே தங்களது அரசியல் பரப்புரை இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெற மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தியின் படுகொலை நியாயமானது என்ற வகையில் சீமான் பேசியமைக்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்பலைகள் தோன்றியிருந்ததுடன், அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனியார் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள சீமான் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “இதுபோன்ற பல வழக்குகளை சந்தித்து விட்டேன். பா.சிதம்பரத்தை வெளியில் கொண்டுவரவும், என்னை உள்ளே தள்ளவும் போராடுகிறார்கள். இப்போது பேசியதால் என்ன நடந்துவிடப்போகிறது?

காங்கிரஸ் கட்சியினர் எந்த பிரச்சினைக்கா போராடியுள்ளார்கள். நான் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *