கோவை வெள்ளலுாரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மகன் பிரமோஜ், 19, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் மற்றும் கல்லுாரி நண்பர்கள், 11 பேருடன் ஆறு பைக்குகளில், மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறைக்கு மதியம் வந்தனர்.
அங்கிருந்த தடுப்புகளை மீறி விளாமரத்துார் சென்று அங்குள்ள ஆற்றில் குண்டுக்கல்துறை என்ற பகுதியில் தண்ணீரில் விளையாடினர். நீச்சல் தெரியாத நிலையில் பிரமோஜ் தண்ணீரில் மூழ்கினார்.
இரண்டு மணிநேரம் போராடி, தண்ணீரிலிருந்து பிரமோஜின் பிரேதத்தை வெளியே எடுத்தனர்.