பிரதோஷத்தை தவறவிடாமல் தரிசனம் செய்வது மகா புண்ணியம்!


மகா புண்ணியம்:

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று தரிசிக்க வேண்டும். இதனால், உறவு வளப்படும்.

சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம். எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள்.

அந்த நாளில், நந்திதேவரையும் வில்வம் சார்த்தி, அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது நமக்கும் நம் குடும்பத்தாரும் நம் சுற்றத்தாருக்கும் பல நன்மையான விஷயங்களை வழங்கும் என்கிறார்கள் பெருமக்கள்.

இந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார்.

அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, அலை மகளான லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும் கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராதன வரலாறு.

 

நன்றி : tamil.widehunt.comLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *