உலகம் இவர்கள் வசம்


உலகம் இவர்கள் வசம் அதன் அசைவும் இவர்களிடம் – எம்

தோற்றுப்போன வரலாற்றை எழுத வைத்த ​​​​​தலைவர்கள் …

உலகின் கோடியில் தமிழனன்று மடிந்ததை  – இந்த

குளத்தங்கரை குருவிகள் கூறுமா இவர்களுக்கு …5 thoughts on “உலகம் இவர்கள் வசம்

 1. உலகத்தின் பலம் இவர்களிடம் வலம் வர – எம்

  இன மக்களின் மனம் இன்னும் கனமாக இருப்பதேன்??

  எம் இன வரலாற்றை திரும்பி பார்த்த தலைவர்கள்

  எம் கறை படிந்த கண்ணீரை துடைத்து விட மறந்ததேன்??

  ST from Canada

 2. புலி வருது புலி வருது
  என்றான் ஒருவன்
  ஆனால் புலி வந்தபோது
  உதவிக்கு யாருமில்லை.
  வாய் வீரம் பேசி நின்ற
  சதாமை அழித்தவர்கள்
  சரீன் வாயு வீசியும்_இன்று
  செயலிழந்து நிற்கின்றார்.

  எல்லாளன் தோற்றான் அன்று
  பின்வந்த சங்கிலியனும் தோற்றான்
  பண்டாரவன்னியனும்
  தோற்றுத்தான் போனான்.
  ஆனால் தமிழன் மீண்டும் மீண்டும் எழுந்தான்.

  புலிகளெல்லாம் தமிழர் தான்
  தமிழரெல்லாம் புலிகளல்ல.
  தோற்றது புலிகள் மட்டும்
  தமிழருக்கிது தோல்வியல்ல.

  மேற்குலகை நம்பி
  நாம் வாழ முடியாது
  நம் கையே நமக்குதவி
  ஒற்றுமையாய் தமிழரெல்லாம்
  ஓரணியில் திரண்டுவிட்டால்
  வெற்றிக்கனி நமக்கே
  வெல்வதற்கு யாருமில்லை
  உரிமையை நாம் மீட்டிடலாம்.

 3. கொலைவெறி
  பிடித்த அரசியல் பாடத்தை
  அரண்மனை மாடங்களில்
  குதறியெடுக்கும் பிதாமகர்கள்….

  தன்னினம் வாழ
  மதிகொண்டு ஆளும் அரசர்கள்,
  பிறயினம் சாக விதியென சொல்லும்
  விசப்பூக்கள்..

 4. குளத்தங்கரைக் குருவிகள் அத்தனையும் ஒன்று கூடி எம்
  சோகத்தைக் கூவி ..உரைத்தாலும்
  இந்தப் பழுத்த அரசியல் பாவிகளின் காதுகளில்தான் விழுந்திடுமோ ..
  காற்று வாங்க உல்லாசமாய் நடை போட வரும் இவர்கள்
  அடுத்து எந்தச் சின்னஞ் சிறுநாட்டை விழுங்க திட்டமிட வந்தாரோ
  மனத்தின் அழுக்குகளை மறைக்க அழகாக ஆடை மாட்டிக் கொள்ளும்
  தலை சிறந்த நயவஞ்சக நடிகர்கள் – ஆனாலும்
  உலகம் இவர்கள் வசம் என்பதுதான் சோகமான உண்மை…….

  From – Shivi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *