பார்ப்பதெல்லாம் அழகே!


பார்ப்பதெல்லாம் அழகே
அழகெல்லாம் அவளோ
இல்லை அழகென்றால் அவளா ?
நிலவெல்லாம் அவள் முகம்
இல்லை அவள் முகம் தான் நிலவா?
அல்லி போன்ற இருவிழிகள்
இருவிழிகள் தான் அல்லியா?
ரோஜா தான் இதழோ
இதழ்கள் தான் ரோஜாவின் இதழ்களோ?
சித்திரை மாதத்தில் பிறந்தவள்
இவள் பிறந்ததால் தான் அது சித்திரையோ ?
அவள் தான் உலகமா
இல்லை உலகெலாம் அவளா?
நொடிக்கு நொடி பார்ப்பதால் இவள் கடிகாரமோ
இல்லை இவளே பார்க்க வைக்கும் கடிகாரம்
இவள் கவிபாடும் குயில்
இல்லை இவளே குயிலா?

 

நன்றி : கவிராஜா | எழுத்து.காம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *