எது உண்மை? | சிறுகதை


முன்னொரு காலத்தில், அனந்தபுரம் என்னும் நாட்டை அரசன் ஒருவன் மிகவும் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனிடம் அமைச்சர்களும், தளபதிகளும், போர் வீரர்களும், மக்களும் மிகவும் மரியாதையுடனும், பணிவுடனும் நடந்து கொண்டனர்.

அரசனும் அனைவரிடத் திலும் அன்போடும், பண்போடும் பழகி வந்தான். அரசனது அமைச்சரவையில், அமைச்சர்களுக்கெல்லாம் தலைமையாக முதல் அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் வயதானவர்; அரசனிடம் மிகுந்த விசுவாசம் உள்ளவர்.

அவர் ஒருநாள் அரசரிடம், “”அரசே! எனக்கு வயதாகி விட்டது. என்னால், இனி பணியாற்ற இயலாது. மனதும், உடலும் தளர்ந்துவிட்டது. எனவே, இனி நான் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்,” என்றார்.

இதைக் கேட்ட அரசர், “”அப்படியே செய்யுங்கள் அமைச் சரே! தங்களுக்கும் வயதாகி விட்டது. இனி உடம்பு இடம் கொடாது. எனவே, தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் தாங்கள் எங்கள் அரண்மனைக்கு அடிக்கடி வந்து எங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் பதவி விலகியதன் காரணமாக, அந்த தலைமை அமைச்சர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும். யாரை நியமிக்கலாம் என்று அரசர் குழம்பினார்.
அமைச்சரின் மகனும் அமைச்சரவையில் இருந்தான். அவன் தனது தந்தையின் பதவியினைத்தான் ஏற்க விரும்பினான். அவன் தனக்கு தலைமைப் பதவியைத் தருமாறு அரசரை வேண்டினான்.

அரசரோ, “”உன்னை விட வயதில் முதிர்ந்தவர்கள் இருக்கையில், உன்னை நியமித்தால், மற்ற அறிஞர் களின் அறிவையும், வயதை யும், மதிப்பதாகாது. எனவே, நாளை முடிவு செய்வோம்,” என்று கூறிவிட்டார்.

மறுநாள் அமைச்சரவை கூடியது. மன்னரும், மற்ற அமைச்சர் பெருமக்க ளும் அமர்ந்திருந்தனர். மன்னர் தலைமை அமைச்சரின் மகனை அழைத்தார்.

அவன் பணிவோடும், சந்தோஷத்தோடும் மன்னனை வணங்கி நின்றான்.
அடுத்து அமைச்சர்களில் முதியவர் ஒருவரையும் அழைத்தார்.

“”அமைச்சர் பெருமக்களே! இப்போது இவர்கள் இருவருக்கும் ஒரு தேர்வு வைக்கப் போகிறேன். இவர்கள் இருவரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கே தலைமைப் பதவி,” என்றார்.

எல்லாரும் முழுமனதுடன் சம்மதித்தனர்.

அரசன் ஒரு பணிப்பெண்ணை அழைத்து, “”அந்த இரு பூந்தொட்டிகளையும் எடுத்து வா!” என ஆணையிட்டார்.

அந்தப் பணிப்பெண் இரு பூந்தொட்டிகளையும் எடுத்து வந்து வைத்தாள்.
“”இருவரும் நன்கு கவனி யுங்கள். இந்த இரண்டு தொட்டிகளும் ஒரே அமைப்பு; ஒரு மாதிரியான மலர்கள்; இரண்டும் ஒரே மாதிரியான தோற்றம் உடையவை. இரண்டில் ஒன்றுதான் உண்மையான மலர். ஒன்று காகிதமலர்.

நீங்கள் இருவரும் அங்கிருந் தபடியே இருந்து கொண்டு, இதில் எது காகித மலர், எது உண்மையான மலர் என்று கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார்.
இருவருமே சற்றுநேரம் திகைத்தனர். தலைமை அமைச்சரின் மகன் சிந்தித்து, சிந்தித்து பதில் கூற முடியாமல் தவித்தான்.

வயது முதிர்ந்த அமைச் சரோ சற்று நேரம் சிந்தித்தார். பிறகு, இரண்டு தொட்டிகளை யும் தோட்டத்தின் அருகே கொண்டுபோய் வைக்கும்படி சொன்னார். அதேபோல் இரு தொட்டிகளும் தோட்டத்தில் வைக்கப்பட்டன.
உண்மையான மலரைத் தேடி வண்டுகள் வட்ட மிட்டன. காகிதமலர் அப்படியே இருந்தது. பின்பு வண்டுகள் மொய்ப்பதே உண்மையான மலர் என்று கூறினார்.

அரசர் அந்த அமைச் சரைப் பாராட்டி, அவரையே தலைமை அமைச்சராக நியமித்தார்.

 

நன்றி : பிரியா ஆனந்த் | இன்று ஒரு தகவல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − thirteen =