கவிதை | இவளின்றி நானில்லை; ஏன் நீயுமில்லை | த. செல்வா


குடியுரிமை சட்டம் எதிர்ப்புக்கான பட முடிவுகள்"

இவள் அதர்மச்சிறையின்
இடியாய் எழுபவள்
இரும்புத் திரையாய் சினத்தைச் சுமப்பவள்
இனி நதியின் முகமும் இவளில் உண்டு
இரும்பின் குணமும் இவளிலுண்டு
இவளின்றி இல்லை எதுவுமிங்கு
இவளே இனத்தில் இறுதி அம்பு
இவள்போல் இல்லை உயர்ந்த மாண்பு
இவளிடம் தேடு இதயத் தூய்ம்மை
இளமை பற்றி இவளைச் சுற்று
இன்பத்தின் எல்லை இவளே என்றும்
இனிமையின் கதவுகள் இவளிடம் திறக்கும்
இறக்கம் கலைத்த மனத்தினள் ஆனால்
இரவின் மடியில் மலரும் மழலை
இவளே என்றும் ஆண்களின் தேவை
இவளே தேடல் இவளுக்கு தேடு
இவளின்றி எதிலும் ஆணுக்கு வாடல்
இம்மை என்பது அம்மையில் சனிப்பது
இவளை விலக்கி இனிமை ஏது
இருவரின் கையே உரமாய் ஆகுது
இருவரின் இணைவில் மூவருமாகுது
இறப்பைச் சீராக்கும் பிறப்பின் தெய்வம்
இந்திரக் குணங்களில் இவளே மந்திரம்
இடைகளில் மனததை பறித்திடும் மாயமும்
இடையிலா முடிகளில் முப்படை தோற்றிடும்
இங்கிதமான பேச்சது பெண்மையில்
இன்பத்தின் கனியென நுளைந்திடும் ஆண்மையில்
இன்று போய் நாளை வா என்பதும் இவளே
இன்றே போ இனிவராதே என்பதும் இவளே
இங்குதான் வசந்தங்கள் என்பதும் இவளே
இவளின்றி இனி இல்லை வாழ்வது என்பதுமிவளே
இனியன புகவிடும் இன்னிய பொத்தகம்
இமைகளில் இணைந்திடும்
இன்பத்தின் இலக்கணம்
இதயத்தில் இராகமிசைக்கும் இளகிய மனமிவள்
இசையென வசையிலா நுளைந்திடும் வாசமிவள்
இவள்போல் போராளி இல்லையினி
இவள்போல் போர்விழி பேரெழில்
இவள் போல் தெய்வங்கள் இல்லை இங்கு
இவளின்றி நானில்லை ஏன் நீயுமில்லைLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *