நீ போகும் வழியெல்லாம்…


நீ போகும் வழியெல்லாம்
உன் நிழலாய் நானிருப்பேன்…
நீ பேசும் பொழுதெல்லாம்
உன் இதழாய் நானிருப்பேன்…
நீ சிரிக்கும் நேரத்தில்
உன் நினைவாய் நானிருப்பேன்…
நீ உறங்கும் நேரத்தில்
உன் கனவாய் நானிருப்பேன்…

உன் நினைவில் நிதம்வந்து
பறக்கும் பறவை நான்…
உன் நித்திரை கலைந்திட்டால்
எழுப்பும் நினைவாய் நான்…
நீ வைக்கும் பூவிலெல்லாம்
வாசமாய் இருப்பேன் நான்…
நீ படிக்கும் பாவிலெல்லாம்
பாசமாய் இருப்பேன் நான்…

என் மூச்சில் குடியிருக்கும்
பிராண வாயுவும் நீ…
என் பேச்சில் வந்துவிழும்
நொடிக்கொரு சொல்லாய் நீ…
என்னைத் தழுவும் இளங்காற்றில்
முழுதாய் உணர்வதும் நீ…
நான் அழுகும் நேரமதில்
ஆறுதலளிக்கும் இதயமும் நீ…

என் முன்னுள்ள கண்ணாடியில்
பார்த்தால் தெரிவதும் நீ…
என் உள்ளுள்ள சிந்தனையில்
வியாபித் திருப்பதும் நீ…
என் வாழ்வின் வசந்தமாய்
ஆட்கொண்ட தேவதை நீ…
என் நெஞ்சினில் ஆட்சிசெய்யும்
பூக்களின் மென்மையும் நீ…

 

 

நன்றி : அ வேளாங்கண்ணி | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *