உனக்காக நான் எனக்காக நீ!


உன் விழிக் குளத்தில்
வந்து நான் நீராடவா?
உன் செவிகளில் வந்து
அன்பு ராகம் பாடவா ?
உன் இதழ்களில் இன்னும்
செம் மலர் பூசவா ?
உன் பற்களைக் கவர்ந்து
நான் முத்துக்கள் கோர்க்கவா ?
உன் கூந்தலில் வந்து
நான் கூடு கட்டவா ?
உன் உடலிலே வீசும்
தென்றல் காற்றாய் மாறவா?
உன் இதயம் அமர்ந்து
காதல் ஆட்டம் போடவா?

 

நன்றி : அஷ்ரப் அலி | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *