எண்ணித் துணிக!


சிந்திக்க மறந்த காரணத்தால்,
சிந்திக்காது விட்டு,
நொந்து நூலாகி
வெந்து வேலாகி
கந்தலாகி
கடமை மறந்து,
உம் வாழ்வை
துன்பத்திடம் கடன் தந்து
துயரத்தில் மூழ்கிய
சோதரனே! சோதரியே!
எண்ணிப் பாருங்கள்
வள்ளுவன் சொல்லை
எண்ணித் துணிக கருமம்…
என்னும் எழுச்சி மிகு
கருத்தை மனதிற்கொண்டு
எண்ணித் துணிந்திடுவீர்
இனியேனும்
சிந்தித்து நடந்திடுவீர்!

 

நன்றி : புஸ்பா கிறிஸ்ரி | வார்ப்பு இணையம்One thought on “எண்ணித் துணிக!

 1. இருளின் ஒளிழகில் நிழலாடும் மனம்
  இரவு,
  பகலெல்லாம் வெட்கப்படும் பொழுது
  அப்படியே இருந்தாலும் இல்லாததுபோல,
  உற்றுநோக்கலில் காதலியும் தோற்பாள்
  காணும்போது தரும் பேரின்பம்!

  பயத்தின் ஊற்றுகள் கற்பனையில் பவனி
  இருள் படைப்பின் முதல்படி
  நீக்கமற நிறைந்துள்ள அற்புத ஆற்றல்!

  மனம் அடையத் துடிக்கும் பேருலகம் அது,
  பகல் காட்டிய காட்சிகள் கேட்பாறற்று
  கடந்து சென்றால் மனம் மறுக்கும் இருள்

  படைப்பின் மூல சக்தியாய்,
  பகையின் தொடக்கப் புள்ளியாய்,
  எல்லாம் ஒளி இருளில்
  ஓசைகளின் கூட்டொலியில்
  சொல்ல மறந்த சோகங்கள்
  அமைதியின் ஓசையில்
  காற்றின் கண்ணீர்ப் பனித்துளியாய்!

  ரகசியங்கள் பேசிய மரங்களெல்லாம்
  தூங்கிக்கொண்டிருக்கும் பகலில்,
  உற்றுப் பாருங்கள் இரவின் கண்,
  பிரகாசமான ஒளியில் ஒவ்வொன்றையும் நோக்கி
  இறையின் தரிசனம்!

  கவிஞர் பூராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *