நீ வருவாயென..


பருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ;
பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !
சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்;
தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !
நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்,
நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்
நீ வருவாயென வாயிலை நோக்கி…..

– கலைப்ரியா சோமசுந்தரம் | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *