நாதியற்ற மனிதர்களின் புலம்பல்!


கரை புரண்டு ஓடின காவேரி
உங்க வோட்டு அரசியலில்
சாக்கடையாய் மாறிடுச்சு

மழையும் வரல
காவேரி தண்ணியும் வரல
அதனால
எங்க வயிறப்போல
வறண்டு கிடக்குது காடு

படிக்க போன பிள்ளைகளை
பனியன் கம்பெனிக்கும்
பால் கொடுத்த பசு மாட்டை
கறிக்கடைக்கும்
அனுப்பிட்டோம்

பதவிக்காக அடிச்சிகிட்டிங்க
கடைசியாய்
எங்க வயித்துலையும்
அடிச்சிட்டிங்க

இந்திய குடிமகன்-னு
சொல்லிக்கிட்டு இருந்த
எங்களை
கார்ப்பரேட் குடிமகனாய்
மாத்திட்டிக்க
அதுதாண்டா
நீங்க செஞ்ச சாதனை

தெரியாம கேட்குறோம்
தமிழ்நாட்டை
சுடுகாடா ஆக்கிட்டு
யாருகிட்ட கேப்பிங்க வோட்டு
ஒருவேளை
பொணத்துக்கிட்டயா
இல்லை,
பொணமும் வோட்டு
போடலாமுன்னும்
சட்டத்தை மாத்திடுவீங்களா
செஞ்சாலும் செய்விங்க

உங்களை சொல்லியும்
தப்பில்லை
காசையும்,
குவாட்டரையும்,
கோழி பிரியாணியையும்
வாங்கிகிட்டுதானே வோட்டு போட்டோம்..

ஒருநாள் சாக போறோம்தான்
ஆனா
எங்களோடு சேந்து
இந்த மண்ணும் சாகப்போகுதே
அத நினைச்சாத்தன்
உசிரு வலிக்கிது…

 

நன்றி : மழைப்பயணம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *