வாழ்க்கை | கவிதை | முல்லை அமுதன்


பூமியில்

பிறந்து வாழ்ந்து

அல்லல்பட்டு,

யார் யாருக்காகவோ வாழ்ந்து,

யார் யாருக்கோ கைத்தடியாகி,

எனக்காக  வாழ்ந்தேனா என்பது தெரியாமல் வாழ்ந்து,

நொந்து-

என்னிடம் தரப்பட்ட கைத்தடியுடன்

கட்டிலில் வீழ்ந்து

நைந்து போய்

‘ஈழம் இன்றோ,நாலையோ’

முணுமுணுக்கும்

உறவுகளின் மெதுவான பேச்சும்

காதுள் இறங்க..

 

ஏதோ ஒரு பொழுதில்

கல்விச் சாலியில்,கோயிலில்,

பயணிக்கும் வண்டிகளில்,

கைகுலுக்கி-

வாருங்கள்

என்றழைக்கும் போதுகளில்

உரசிப்போன,

மனதை

வருடிப்போன…

பெண்களை

நினைக்காமல்

இந்த வாழ்வும் கடந்து போகாது

இடுகாடு நோக்கி…

 

– முல்லை அமுதன் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *