அகராதியை புரட்டி அடுக்கடுக்காக வார்த்தைகளைச் சேர்த்து
கவியாக தொடுத்து உன்னிடம் கொடுக்க வந்தேன்..!!
உன் சடைப்பின்னலிலே பின்னுக்குத் தள்ளிவிட்டாய்..!!
ஓவியம் பிடிக்குமென்று எனை வரைந்து,
உயிர் கொடுத்து உன்னிடம் கொடுக்க ஓடி வந்தேன் ..!!
உன் உதட்டை சுளித்தே உயிர் பறித்து விட்டாய்..!!
மலரொன்று கொய்து மண்டியிட்டு தந்துவிட
நானும் தேடி வந்தேன்..!!
பூவிதழை விரித்து புன்னகையை
கொட்டி அதையும் புறக்கணிக்கச்செய்துவிட்டாய்..!!
சரி!! உனக்கு என்ன வேண்டுமென்று நான் கேட்க
வேகமாய் ஓடுகிறாய் வெக்கத்தைச் சிந்திவிட்டு..!!!
அப்படி நான் என்னத்தை கேட்டுவிட்டேன்??
நன்றி : நிவேதா சுப்பிரமணியம் | எழுத்து.காம்