மறுபடியும் சொல் என்னிடம்!


உன்னுடைய ஒரே காதல் நான் தானா?-
இந்த முழு உலகுள்ளும் இப்போது?
உன் காதலின் உண்மையான ஒரே பொருளும் நான்தானா?
அளவிலா உணர்ச்சிகள் உன் உள்ளத்துள் கிளர்ந்தெழும்பினால்,
சாசுவதமான காதல் உன் மனதுள் திடீரென வெளிப்பட்டால்-
அவையெல்லாமே என்னைக்கருதித்தானா?

மறுபடியும் சொல் என்னிடம்

இப்பொழுதே சொல் என்னிடம், உன் இரகசிய எண்ணங்கள் அனைத்தையும்
துயரங்கள் அனைத்தையும்
உள் வாங்கியவள் நான்தானா?
நீ என்ன உணர்கிறாயோ, நீ என்ன நினைக்கிறாயோ
எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்துகொள்.

வா, என் அன்பே,
உன்னை மிகவும் வேதனைப்படுத்தும் எதனையும்
என் இதயத்துள் கொடு
மறுபடியும் சொல் என்னிடம்!

 

துருக்கிய மொழி மூலம் : niger hanim
ஆங்கிலத்தில் – Talat S.Halman
தமிழில்- தமிழினி

நன்றி : viduthalai.wordpress.comLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *