பிரபாகரன் சொல்லித்தான் காங்கிரஸை ஆதரித்தேன்: லண்டனில் திருமா சர்ச்சைப் பேச்சு


பிரபாகரன் சொல்லித்தான் தாம் காங்கிரஸை ஆதரித்து, அக் கட்சியுடன் கூடடணியில் இணைந்து கொண்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள்..நீங்கள் ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா’ எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்’. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்“ என்றார். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *