ஒரு கிலோ மாவுக்கு ஒரு குடம் தண்ணீர் இலவசம்!


வியாபாரத்திலும் ஒரு பொதுநலன்; தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பல்வேறு இடங்களில் குறிப்பாக தலைநகர் சென்னையில் மக்களை தவிக்கவிட்டுள்ளது,

பல்வேறு தரப்பினர் தன்னார்வு நிறுவனத்தினர் மக்களுக்கு நீர் தட்டுப்பாட்டை போக்க இலவசமாக நீர் விநியோகங்கள் குளங்களை தூர் வாருதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள கடையொன்றில் ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் நிலத்தடி நீர் இலவசம் என்ற அறிவிப்பு அப்பகுதி மட்டுமல்லாது சமூகவளைதலங்களின் செய்திகளினும் ஊடக பலரது கவனத்தைக் கவர்ந்துள்ளது.

தண்ணீர் வேண்டுமென்பவர்கள் குடம் கொண்டுவர வேண்டுமென்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடையில் பணியாற்றுபவர்கள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகத் தினமும் அவதிப்படுவதாகக் கூறுவதைக் கேட்டபிறகு இந்த யோசனை தோன்றியதாகத் தெரிவித்துள்ளார் பார்த்தசாரதி. இதனால் இவரது கடையை நாடி வருபவர்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது.

நன்றி-tamilindiaLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *