வடமாகாணத்திற்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிலைமை வழமைக்கு திரும்பும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும், வழங்குமாறும் அதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும், அமைச்சர்களின் செயலாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர்கள், இராணுவத்தளபதி மற்றும் இடர்முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும், ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் இராணுவத்தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *