இன்று முக்கிய அமைச்சர்கள் நியமனம்!அமைச்சரவை மறுசீரமைப்புக்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் மாமனாரான மறைந்த வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் பீ.எம் விஜேநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்தனர். இதனையடுத்து அந்த இல்லத்தின் அறை ஒன்றில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசமும், அமைச்சர் தயா கமகேவும் உடனிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயகலத்தில் இடம்பெறவுள்ளது. அரசியல் வட்டார தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

இதற்காக இன்று முற்பகல் 9.30 அளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அமைச்சர் பதவிகளின் துறைகள் சிலவற்றில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்ஷவுக்கு இன்றயை தினம் புதிய அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, அண்மையில் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வகித்த அமைச்சு பதவிகளுக்காக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளது என ஜனாதிபதி செயகலகம் அறிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *