கண்ணடித்தமைக்காக பிரியா வாரியாருக்கு தொடரப்பட்ட வழக்கு!


ஒரு அடார் லவ் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தை பிரபலமாக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்ய மலராய பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் நடித்திருந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், புருவங்களை அசைத்தும், கண்ணடித்தும் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தப் பாடல் இணையத்தில் வைரலானது. ஆனால் இந்தப் பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி ஹைதராபாத் மற்றும் மும்பையில் வழக்கு தொடரப்பட்டது.

இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரியா வாரியரைக் கைது செய்வதற்குத் தடை விதித்தது.

இந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பிரியா வாரியருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. பிரியா வாரியருக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த அமைப்பே தற்போது மீண்டும் புதிய 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

அந்த மனுக்களில் அவர்கள் கூறியுள்ளதாவது:

படமாக்கப்பட்டு வரும் “ஒரு அடார் லவ்’ மலையாளப் படத்தில் வரும் பாடல் முகம்மது நபியையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிவுபடுத்துவது போல உள்ளது. இஸ்லாமியர்களின் உணர்வை பாதிக்கும் அந்தப் பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும். மேலும் கண்ணடித்தல் என்பது முஸ்லிம் மதத்துக்கு எதிரானதாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் ஓமார் லூலு கூறும்போது, “வட கேரளப் பகுதியான மலபாரில் உள்ள முஸ்லிம்கள் இந்தப் பாடலை 1978-ல் ஆண்டு முதல் கடந்த 40 ஆண்டுகளாக பாடி வருகிறார்கள். அவர்கள் யாரும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருமண விழாக்களில் கூட இந்தப் பாடலை பாடுகிறார்கள். இந்தப் பாடலை மாப்பிள்ளை பாடல் என்று அவர்கள் அழைத்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது, அந்தப் பாடலை இப்போது திடீரென ரத்துசெய்யச் சொல்வது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை” என்றார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 12 =