என்னுள் மலர்ந்தவள் | தே.பிரியன் கவிதை


உன் இயல்புகள்
அத்தனையும்
என் ஆயுளை
வலுப்படுத்துகின்றன

நீ
என்ன
அத்தனை அழகோ

சே” சே ”

நீ என் தூரிகை
மட்டுமே

ஏன் என்கிறாயா ?

ம்…

உன் வெட்கத்தை
அல்லவா பாதுகாக்க
முடிகிறது

அதை விட

என் சிந்தையின்
செயல் வடிவம்
உன்னால் தானே
உயிர் கொள்கின்றது

ஆகவே தான்
நீ இன்னும்
என்னுள்
மலர்ந்து
கொண்டிருக்கின்றாய்,

தே.பிரியன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *