சூப்பர் சிங்கரை கலக்கும் ஈழப் பாடகி புண்யாவுக்கு வாக்களியுங்கள்


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஈழத்தை சேர்ந்த பாடகி ஒருவர் வெற்றி பெறுவார் என்று தமிழகத்தில் மாத்திரமின்றி உலகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் மேடையில் பாடும் அனைவருமே திறமை மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால், இம்முறை லண்டன் வாழ் ஈழத்து வாரிசான புண்யா பல குரலில் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அவரின் திறமையை பார்த்து நடுவர்களே வாயடைத்துபோய் விட்டனர். இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் தீயாகப் பரவி வருகின்றது. இதேவேளை, புண்யாவின் திறமைகளை பார்த்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

எனவே, சூப்பர் சிங்கர் 7 இந்த போட்டியில் வெற்றிபெற உங்கள் புண்யா தகுதியானவர் என்று நீங்கள் நினைத்தால் இந்த ஒன்பது நாளும் மறக்காமல் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற உதவுங்கள்.

.

வாக்களிக்கும் இணைப்பு: http://tiny.cc/jvprfz
 .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *