இலண்டனிலிருந்து சென்னைவரை ஈழப்பெண்ணின் சங்கீதப் பயணம் 


 

இலண்டனில் வசிக்கும் ஈழப்பெண் புனியா செல்வா தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபற்றி வருகின்றார். ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறையில் இசையில் பிரகாசிக்கும் இந்த இளம்பாடகிக்கு புலம்பெயர் தேசங்களில் ஆதரவு பெருகியவண்ணம் உள்ளது.

பன்முகத்தன்மைகொண்ட இசையில் ஆர்வம்கொண்ட புனியா தனது முயற்சியால் வித்தியாசமான இசைக்கோர்வைகளில் மேடை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கின்றார். இந்த வருடம் இலண்டனில் நேர்த்தியாக நடைபெற்ற “அந்திமழை” நிகழ்விலும் இவர் தனது அபாரமான திறமையை வெளிக்காட்டியிருந்தார். இவரது பாடல்களின் காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருதடவையும் ஈழத்தமிழ் இளம் பாடகர்களுக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சந்தர்ப்பம் வழங்கிவரும் நிலையில் இதுவரை இறுதி வெற்றிவரை எவரும் சென்றதில்லை. பாடகி  புனியா செல்வா செல்வாரா, பொறுத்திருந்து பார்ப்போம்.

 

படங்கள் – Jay LUX

 

 

 

 

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *