பாக்கு நீரினையில் சாதனை படைத்த கல்லூரி மாணவர்!


தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

பாக் நீரினையை முதன் முதலாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற இலங்கைத் தமிழர் 1954-ம் ஆண்டு நீந்தி கடந்தார்.

இதனை அடுத்து, 1966ஆம் ஆண்டில் கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக்கு நீரினையை நீந்திக் கடந்தார்.

இதேவேளை, ‘ஆழிக்குமரன்’ என அழைக்கப்படும் குமார் ஆனந்தன் என்பவரும் பாக்குநீரிணையினை நீந்தி கடந்து மீண்டும் தலைமன்னாரை நீந்தி வந்தடைந்தார்.

இதற்காக அவர் 51 மணித்தியாலங்களை எடுத்துக்கொண்டார்.

இதனை அடுத்து 1994 ஆம் ஆண்டில் 12 வயது மாத்திரமே நிரம்பிய குற்றாலீசுவரன் என்ற சிறுவன் பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான ராஜ ஈஸ்வர பிரபு என்பவர் பாக்கு நீரினையை கடந்துள்ளார்.

இவர் சுமார் 12 மணித்தியாலங்களில் பாக்கு நீரினையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

தலைமன்னாரில் அதிகாலை 3 மணியளவில் நீந்த தொடங்கிய ராஜ ஈஸ்வர பிரபு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு பிற்பகல் 2 மணி 56 நிமிடங்களில் சென்றடைந்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *