ஜெ.விற்காக நீதிபதியையே கூண்டில் நிற்க சொன்னவர்.. 90 வயதில் கர்ஜித்த ராம் ஜெத்மலானி


 முன்னாள் மத்திய அமைச்சர் & உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்!

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்தவரான ராம் ஜெத்மலானி இன்று காலமானார்.

1923-ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த சிந்த் பகுதியில் (தற்போது பாகிஸ்தான்) பிறந்த ராம் ஜெத்மலானி, 18 வயதிலேயே சட்டப்படிப்பு முடித்து அங்கு வழக்கறிஞராக பணியாற்றினார். பிரிவினைக்குப் பின்னர் இந்தியா வந்த அவர், டெல்லி மற்றும் மும்பை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ராம் ஜெத்மலானி, பாஜகவில் இணைந்து இரண்டு முறை, மக்களவை உறுப்பினராக தேர்வானார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆகிய துறைகளை கவனித்துக்கொண்டார்.

பின்னர், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, 2004-ம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்து அரசியலில் இருந்து விலகி, வழக்கறிஞர் பணியை தொடர்ந்து செய்தார். பல முக்கிய வழக்குகளில் ராம் ஜெத்மலானி வாதிட்டுள்ளார். இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களில் ராம் ஜெத்மலானியும் ஒருவர்.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். 2 ஜி வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். 2010-ம் ஆண்டு மீண்டும் அவர் பாஜகவுக்கு திரும்பி, மாநிலங்களவை எம்.பி. ஆனார். பாஜகவில் மோடி தலைமைக்கு வந்ததும், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்த அவர், சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் வழக்கறிஞர் பணியிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருந்தார். 95 வயதான ராம் ஜெத்மலானி இன்று காலை தனது வீட்டில் வயோதிகம் காரணமாக காலமானார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு.

 எப்படி

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி மைக்கேல் டி குன்கா இந்த வழக்கில் மிகவும் கடுமையாக, நேர்மையாக செயல்பட்டு, ஜெயலலிதா தரப்பை கேள்விகளால் துளைத்தார். ஜெயலலிதா வழக்கு இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது எல்லோரும் வைத்த குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சரியாக வாதம் செய்யவில்லை என்பதுதான். ஒரு காலத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் எல்லாம் மிக சிறப்பாக வாதம் செய்வார்கள். ஆனால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் அப்படி வாதம் செய்யவில்லை என்று புகார் எழுந்தது.

யார் வேண்டும் இதை தெரிந்து கொண்ட ஜெயலலிதா உடனடியாக தனக்கு மாற்று வழக்கறிஞர் வேண்டும் என்றார். இதற்காக அவர் அழைத்து வந்த வழக்கறிஞர்தான் 90 வயது நிரம்பிய ராம் ஜெத்மலானி. அவர் வந்த பின் கர்நாடக ஹைகோர்ட்டில் இந்த வழக்கின் போக்கே மாறியது என்று கூட கூறலாம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *