தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இலவச இடம்!


அனைத்து தனியார் பள்ளிகளும் 25% ஏழை குழந்தைகளை கட்டாயம் இலவசமாக சேர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்!

“கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ) அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டம் 6 முதல் 14 வயதுள்ள அனைத்து குழந்தைகளும் தொடக்க கல்வி பெறுவதை அடிப்படை உரிமை ஆக்குகிறது.

இந்த சட்டத்தின் 12-வது பிரிவின்படி அனைத்து அரசு உதவிபெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், சிறப்பு பிரிவு பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு அல்லது அதற்கு கீழே உள்ள வகுப்புகளில் குறைந்தபட்சம் 25% அளவுக்கு ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகளை சேர்த்து தொடக்க கல்வி முடியும் வரை இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நன்றி – zeetamilLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *