காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள்!


 

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தரப்பினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு கோரி, மீன்பிடிசார் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *