அரசியல் நெருக்கடி தொடர்பில் நீதிமன்றத்தை நாட ரணில் மறுப்பு


நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பில் நீதிமன்றத்தை நாட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மறுப்பதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் நீதிமன்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கின்றது. இதன் காரணமாக நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை எடுத்துச் சென்றால், அது மீண்டும் பாராளுமன்றத்திற்கே அனுப்பப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் செயற்படத் தாம் விரும்புவதாகவும் அதில் எவ்வித சிக்கல்களும் இல்லை எனவும் அவர் கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினைகள் அரசியலமைப்பிற்கு தேவையற்ற ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படுவது சிறந்த விடயம், எனக்கு பெரும்பான்மையினரின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *