பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றார்


சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில்  இலங்கையின் 5 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க  பதவியேற்றுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ நேற்று பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, இன்றைய பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சட்டத்தரணியான ரணில் விக்ரமசிங்க 1977 ஆம் ஆண்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். ரணில் விக்ரமசிங்க பிரதி அமைச்சராக, சபாநாயகராக மற்றும் இலங்கைப் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1994 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது அவரினால் இரண்டு தேர்தல்களில் மாத்திரமே வெற்றிபெற முடிந்தது.

2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் 2002 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பூரண ஆதரவுடன் சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் வெற்றிக்காக தமது கட்சியை வழிநடாத்திய அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதியான ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவராக 20 வருடங்கள் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *