ரோஹிங்கியா அகதிகளை இந்தியாவிலிருந்து நாடுகடத்துவது தொடர்பான மனு..


சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து ஓராண்டுக்குள் நாடுகடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது அவசர மனுவாக விசாரிக்கப்பட வேண்டும் என பாஜக வழக்கறிஞரும் செய்தி தொடர்பாளருமான அஷ்வினி உபதயா கோரியிருந்தார்.

இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, இது தொடர்பான விசாரணை ஜூலை 9 அன்று நடைபெறும் எனக் கூறியுள்ளத.

சர்வதேச எல்லையில் உள்ள பகுதிகளை பெருமளவிலான சட்டவிரோத குடியேறிகள் ஆக்கிரமித்துள்ளதால் அது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மியான்மர் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்துள்ள பெருமளவிலான சட்டவிரோத குடியேறிகள் எல்லையோர மாவட்டங்களில் மக்கள் தொகை இருப்பை மட்டும் அச்சுறுத்தவில்லை, மாறாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையையும் பலவீனப்படுத்துகின்றனர்,” அஷ்வினி உபதயா மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வங்கதேச பெண்கள் கடத்தப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தை முக்கிய பிரச்னையாக பாஜக அடையாளப்படுத்தியிருந்தது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *