அறிக்கை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | ரோஹிங்கியா அகதிகள்


தில்லி ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும ரோஹிங்கியா அகதி முகாம்களில் வழங்கப்படும் மருத்துவம் சுகாதாரம் குடிநீர் உள்ளிட் அடிப்படை வசதிகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படும் சுகாதார மற்றும் கல்வி வசதிகள் போன்று ரோஹிங்கியா அகதிகளுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ள மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவினை வழங்கியுள்ளது. ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்தும் மத்திய அரசின் முடிவிற்கு எதிரான வழக்கும் இந்த அமர்வின் இறுதி விசாரணையில் உள்ளது.

முன்னதாகஇ கடந்த ஆண்ட நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லீம்களை கண்டறிந்து நாடுகடத்த மாநில அரசிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்திய அரசின் கூற்றுப்படி 14இ000 ரோஹிங்கியா அகதிகள் மட்டுமே ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிவுச் செய்த அகதிகளாக இந்தியாவில் வசிக்கின்றனர். நாடுகடத்தப்படுவதாக கூறப்படும் சுமார் 40இ000 அகதிகள் சட்டவிரோதமாக இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிடும் மத்திய அரசுஇ ரோஹிங்கியா அகதிகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

இன்றைய நிலையில் ஜம்மு அசாம் உத்திர பிரதேசம் ஹரியானா டெல்லஇ ஐதராபாத் ராஜஸ்தான் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர்.

1982 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மியான்மர் குடியுரிமைச் சட்டத்தின் படி ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. புத்த மதத்தவரக்ளைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில் 134 இனக்குழுக்களக்கு குடியுரிமை அளிக்கப்பட்டருந்தாலும்இ ரோஹிங்கியா முஸ்லம்கள் பங்களாதேஷிலிருந்து வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்றே மியான்மர் அரசு முத்திரைக் குத்துகிறது. இதன் காரணமாக மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களை மையப்படுத்திய கலவரங்களும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. இதனால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் பல்வேறு நாடுகளுக்குத் தஞ்சம் கோரிச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளின் எதிர்காலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மையப்படுத்தியே உள்ளது.

 

Report by,

Migration Correspondent, Altamira World WideLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *