டெல்லி டெயார் டெவில்ஸ் அணியை 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது!


ஐ.பி.எல் தொடரில் நேற்றைய 19 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி டெயார்டெவில்ஸ் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலளித்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 18 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதேவேளை, 18 ஆவது ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றிருந்தது. இதேவேளை, இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபத் அணிகளுக்கு இடையிலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலும் இடம்பெறவுள்ளன.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *