“துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டும்” | அதிபர் ஒபாமா


அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.  நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம்  உரையாற்றினார். இந்த உரையில் அவர் “ 3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பள்ளி குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது. துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இதற்கு மேலும் சாக்கு போக்குகளை சொல்லி சமாளிக்க கூடாது. ஆயுதங்களை தாயாரித்து விற்கும் தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகளை வேண்டுமானால் கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

ஒபாமாவின் இந்த அறிவிப்புக்கு குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் ஜெப் புஷ்  கூறுகையில், ” எப்போதெல்லாம் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சட்டத்தை மதிக்கும் நாட்டு மக்களின் உரிமைகளை பறிப்பதில் ஒபாமா குறியாக உள்ளார். குடி மக்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகளைப் பறிப்பதை விட குற்றவாளிகளின் கைகளில் இருந்து ஆயுதங்களை பறிக்க நடவடிகை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *